ராணிப்பேட்டை மாவட்டம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்டு தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான. எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான. சு. ரவி எம்.எல்.ஏ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ராணிப்பேட்டையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு சு. ரவி எம்.எல்.ஏ பேசியதாவது; கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்த 58 பேர் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், தமிழக அரசின் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை சிபிஐ விசாரணை வேண்டும், மத்திய அரசு தமிழக அரசை டிஸ்மிஸ் பண்ண வேண்டும், சட்டமன்றத்தில் இருந்து எடப்பாடியார் தலைமையில் நாங்கள் வெளியே வந்தபோது காவல்துறை எங்களை கைது செய்ய பார்த்தது அப்போது எடப்பாடியார் சொன்னார் ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும் என்று இவ்வாறு சு.ரவி எம்.எல்.ஏ கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து பேசினார்.
இதில் முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர். சம்பத், மாவட்ட துணை செயலாளர். தயாளன், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். அருணாபதி, நெமிலி நகர பொருளாளர். நவநீதகிருஷ்ணன், நெமிலி மாணவர் அணி செயலாளர். முருகன், வினோத்குமார், பனப்பாக்கம் நகர செயலாளர். மணிவண்ணன் மற்றும் மாவட்ட, நகர, கிளை கழக நிர்வாகிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment