தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவரது 50 பிறந்தநாளை முன்னிட்டு ஆற்காடு அண்ணா சிலை அருகில் கேக் வெட்டி கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் பூக்கடை மோகன் கலந்துகொண்டு 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலை வழங்கினார் படைச்சூழல் நின்றிருந்த பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார் இந்நிகழ்ச்சிக்கு ஏடி.சுரேஷ் தலைமை தாங்கினார் அமித் பாஷா சிதம்பரம்,மகளிர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர் நிகழ்ச்சியாக ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஆற்காடு நகர பொறுப்பாளர்கள் ஆற்காடு நகர இளைஞரணி சார்பாக வினோத் மற்றும் அஜித் தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு அண்ணதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது, இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பூண்டி தீனா, ஆற்காடு நகர இளைஞரணி நிர்வாகிகள் தளபதி அஜீத்குமார், தளபதி. சரவணன், ரமேஷ், தீபக், ரஞ்சித், ரிஸ்வான், மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment