ராணிப்பேட்டை மாவட்டம் சிவசக்தி பஸ் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனம் வண்டி எண் TN73C8888 என்ற பேருந்தை ஆற்காட்டிலிருந்து காஞ்சிபுரம், ஆற்காட்டிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஒண்ணுபுரம் என்ற வழித்தடத்தில் இயக்கி வந்தது இந்த நிலையில் ஆற்காட்டிலிருந்து ஒண்ணுபுரம் வரை செல்லும் வழித்தடத்தை சிவசக்தி பஸ் சர்வீஸ் நிறுவனத்தினர் எந்த முன் எச்சரிப்பும் இல்லாமல் திடீரென நிறுத்தியதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஒண்ணுபுரம் கிராம பொதுமக்கள் கூறுகையில் சிவசக்தி பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் கேட்டபோது நாங்கள் இனிமேல் உங்கள் ஊர் வழித்தடத்தில் பேருந்தை இயக்க மாட்டோம் உங்களால் ஆனதை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அலட்சியமாக பதில் சொன்னதாக கூறினர், மேலும் அவர்கள் பேசுகையில் துறை சார்ந்த அதிகாரிகள் தனியார் பஸ் அல்லது அரசு பேருந்தை ஆற்காட்டிலிருந்து ஒண்ணுபுறம் வரை உள்ள வழிதடத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment