கடந்த 15.06.2023 தேதி சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், விற்பவர் மற்றும் மதுபாட்டில்களை பதுக்குபவர், கடத்துபவர்களை பற்றியும் தகவல்களை தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரத்தியேகமாக Whatsapp எண் 9677923100 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண்ணானது முழுக்க, முழுக்க மாவட்ட வல் கண்காணிப்பாளரின் நேரடிகட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
மேலும் ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர்கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் 9042742564 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் Whatsapp மூலம் தகவல் அளிக்கலாம். அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் 9042729352 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் whatsapp மூலம் தகவல் அளிக்கலாம். தமிழக காவல்துறையின் மதுவிலக்கு கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா உதவி எண்: 10581 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம்.
இந்த எண்ணிற்களுக்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கைஎடுக்கப்பட்டுதீர்வுகாணப்பட்டுவருகிறது. மேலும் புகார் அளிக்கப்படும் நபர்களின் இரகசியம் பாதுகாக்கப்பட்டு புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்பகிறது.
- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444
No comments:
Post a Comment