ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துரியோதனன், பீமன், காந்தாரி, கிருஷ்ணன் வேடமிட்ட கட்டைக்கூத்து கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினார்கள். அதனை தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு மேல் அக்னி வசந்த விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். நெமிலி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி வசந்த விழாவை கண்டுகளித்து ஸ்ரீ திரௌபதி அம்மனை சாமி தரிசனம் செய்தனர். அக்னி வசந்த விழாவை முன்னிட்டு நெமிலி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment