நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் சமூக தணிக்கை குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 15 June 2024

நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் சமூக தணிக்கை குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள் மற்றும் சமூகத் தணிக்கை குறித்து கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர். சாந்தி ரவி, துணைத்தலைவர். கவிதா சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர். சரவணன் அவர்கள் கலந்துகொண்டு திட்டப்பணிகள் குறித்து விவாதித்தார். இதில் வேட்டாங்குளம் கிராம நிர்வாக அலுவலர். நிரோஷா, ஊராட்சி செயலாளர். சௌமியா, வார்டு உறுப்பினர்கள். ஞானப்பிரகாசம், மோகனா அருள், பொன்னுரங்கம், ஸ்ரீ ராமுலு, விஜயா துரை, மக்கள் நலப் பணியாளர். ஏகாம்பரம், நெமிலி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர். பிரசாத், நூலக காப்பாளர். ராஜேந்திரன், லட்சுமி, சித்ரா மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad