கோரிக்கைகளாக, கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை பெருவதை உறுதி செய்ய வேண்டும். 20 வருடங்களாக பதவி உயர்வு இல்லாத பணித்தொகுதியாக இருக்கும் முதுகமை ஆசிரியர்களின் குறைகளை நீக்க ஒரு குழு அமைத்து முதுகலை ஆசிரியர்கள் துயர் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2003 ஏப்ரல் 1க்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோர்க்கு தற்போது நடைமுறையிலுள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும். கால வரையறையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். 2000க்கு பின்பு பணியேற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாட்டைச் சரி செய்திட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றி கோஷங்களை எழுப்பினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஜீன். 14) முத்துக்கடை வேம்புலி அம்மன் கோவில் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செ. சரவணன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆதவன், நிறுவனர் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வேமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
No comments:
Post a Comment