ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கலைஞர் கனவு இல்லத் திட்டம் (கே.கே.ஐ & ஆர்.ஆர்.எச்- 2024-2025) தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர். சாந்தி ரவி, துணைத்தலைவர். கவிதா சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்டம் மற்றும் கலைஞரின் கனவு இல்ல திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு புதிய வீடுகள் பெற விண்ணப்ப படிவத்தை ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கினர்.
இதில் கிராம நிர்வாக அலுவலர். நிரோஷா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். புவியரசு, ஊராட்சி செயலாளர். சௌமியா, வார்டு உறுப்பினர்கள். ஸ்ரீராமுலு, ஞானபிரகாசம், மோகனா அருள், பொன்னுரங்கம், விஜயா துரை, மக்கள் நல பணியாளர். ஏகாம்பரம், நெமிலி மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர். பிரசாத், நூலக காப்பாளர். ராஜேந்திரன், பாலகுரு, விஜயகாந்த் மற்றும் ஊராட்சி மன்ற பணியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment