அவர் பேசிய போது கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, இந்த மரணத்திற்கு முக்கிய காரணம் தமிழக முதல்வர், மதுவிலக்கு துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆகியோர்தான் காரணம் ஏனென்றால் இவர்களின் அனுமதியோடுதான் தமிழகம் முழுவதும் கள்ளச் சந்தையில் மது விற்பனை அதிகரித்து வருகிறது இவர்களை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் மாத்திரம் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது என்று நாம் தவறாக நினைத்து விடக்கூடாது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம், கஞ்சா, தனி நபர்களிடம் அரசு மதுபான பாட்டில்கள் தடையின்றி எந்த நேரத்திலும் கிடைக்கின்றன, இதனால் பல குடும்பங்கள், சிறுவர்கள், வாலிபர்கள் சீரழிந்து வருகின்றனர் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன என்று பல்வேறு கருத்துகளை பேசினார் ஆர்ப்பாட்டம் இறுதியில் வெங்கடேசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment