சோளிங்கர் அருகே மர்ம நபர்களால் வாலிபர் வெட்டிக் கொலை. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 26 June 2024

சோளிங்கர் அருகே மர்ம நபர்களால் வாலிபர் வெட்டிக் கொலை.


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் இவரது மகன் தேவன் வயது 35  திருமணமானவர் இவரின் மனைவி செண்பகம் இவர்களுக்கு  வெற்றிமாறன் வயது 13, சசிமாறன் வயது 7 ஆகிய   இரு மகன்கள் உள்ளனர் இந்த நிலையில்  நேற்றைய முன் தினம் தேவன்  மாலை சுமார் ஐந்து மணிக்கு மேல்   அருகில் உள்ள கரிக்கந்தாங்கள் ஏரியில் மது அருந்தியுள்ளார்.

மது அருந்திய பிறகு வீட்டிற்கு வந்துள்ளார் வீட்டிற்கு வந்தவரை அவருடைய நெருங்கிய  நண்பர்  அதே ஏரியில் மது அருந்த அழைத்திருக்கிறார்  இவரும்  ஏரிக்கு சென்றுள்ளார் அங்கு அவர் மர்ம நபர்களால்  சாராமரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார் அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பக்கமாக சிறுநீர் கழிக்க  சென்றுள்ளார் இவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து தேவன் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளார் தகவல் அறிந்து வந்த சொந்தக்காரர்கள்  அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் தகவல் அறிந்த  சோளிங்கர் நகர போலீசார் தேவனின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சம்பவமரிந்து அரசு மருத்துவமனை அருகில்  கூடின கரிக்கந்தாங்கள் பொதுமக்கள் மற்றும் தேவனின்  உறவினர்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டுமென்று சாலை மறியலில் ஈடுபட்டனர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டனர், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்க்கு மேல் போக்குவரத்து தடைப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad