ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நந்தியாளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ரூபாய் 12 லட்சம் கொண்டு சென்றவரிடம் காரில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து ரூபாய் 12 லட்சத்தை கூட்டுக் கொள்ளை அடித்துச் சென்றனர்.
அந்த மர்ம நபர்களை கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி கிரண் சுருதி IPS அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு அவர்களின் மேற்பார்வையில் ஆற்காடு நகர காவல் வட்ட ஆய்வாளர் சசிகுமார் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து ஆறு எதிரிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது இந்நிலையில் தலைமறைவாக இருந்த மற்றொரு எதிரியான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் பாரதி என்பவரை இன்று கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் மூன்று லட்சத்து 41 ஆயிரத்தை கைப்பற்றியும் எதிரிகள் கொள்ளை அடிக்க பயன்படுத்திய காரையும் கைப்பற்றி எதிரியை இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
மேலும் இந்த எதிரி மீது திருவண்ணாமலை மாவட்டத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
No comments:
Post a Comment