ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கொந்தங்கரை கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கொந்தங்கரை கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். நெமிலி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள ஏரி, கால்வாய், குட்டை, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பலர் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசிக்கின்றனர். சிலர் விவசாயம் செய்து வருகின்றனர். நெமிலி தாலுகா கிராமங்களில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை னஅகற்ற கோரி சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். எந்த சமரசமும் இல்லாமல் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து நெமிலி அடுத்த கொந்தங்கரை கிராமத்தில் கால்வாய் புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த 4 வீடுகள் மற்றும் ஆட்டு கொட்டகைகளை அகற்ற நெமிலி தாசில்தார். ஜெய பிரகாஷ், நீர்வளத்துறை உதவி இன்ஜினியர். ஜெகன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சென்றனர். ஆனால் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நெமிலி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நெமிலி காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் உள்ள பொருட்களை காலி செய்ய இரண்டு நாட்கள் கால அவகாசம் கொடுத்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment