கால்வாயில்லாத காரணத்தினால் எங்கள் வீட்டு கழீவு நீர் செல்ல வழியில்லை. அதலால் நாங்கள் சென்று வர பயன்படுத்தும் போக்கு வரத்து வழியில் கழீவு நீர் வந்து குட்டைப்போல் தேங்கி விடுகிறது. மேலும் மழை காலத்தில் மழை நீரும். கழிவு நீரும் கலந்து விடுவதால் நோய் தோற்று ஏற்படுகிறது. குட்டைப்போல் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கல் உற்பத்தியாகிறது.
விஷப்பூச்சிகள் வீட்டிற்குள் வந்து விடுகிறது. இது சம்மந்தமாக பல முறை மணு அளித்துள்ளோம், மேலும், துப்புரவு பணியாட்களும் தெருவில் வந்து சுத்தம் செய்வதும் கிடையாது. குப்பைகள் அதிகமாக உள்ளது. பல நோய் தோற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் நாங்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம்.
எனவே தாங்கள் நேரில் வந்து பார்வை ஈட்டு எங்கள் தெருவை சுத்தம் செய்து கழீவு நீர், மழை நீர் தேங்காமல் இருக்க கால்வாய் அமைத்து தருமாறு கிருஷ்ணபுரம் கிராமம், காந்தி நகர், முத்து மாரியம்மன் கோவில் தெருவாசிகள் கேட்டுக் கொள்வதாக. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment