மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 2 July 2024

மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் வசிக்கும் 26 ஊனமுற்ற, கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு இலவச தொகுப்பு வீடு கட்டித்தர கோரியும், அப்பகுதிகளில் விடுபட்ட பலருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நகரம் மற்றும் கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை என்ஆர்ஜிஎஸ், நபார்டு திட்டங்களில் புது சாலைகள் அமைத்து தருவது குறித்து, ராணிப்பேட்டை அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு. ரவி எம்எல்ஏ ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோரை நேரில் சந்தித்து திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற ஆலோசனை வழங்கினார். 


தொடர்ந்து அரக்கோணம் நகராட்சியில் குறைந்த வருவாய் பிரிவினருக்கு நகராட்சி ஆணையரால் வழங்கப்பட்ட 150 பேருக்கு கிரையம் செய்து தந்த வீட்டு மனைகளை அளந்து கல்பதித்து தரக்கோரியும் விடுபட்ட 20 பேருக்கு உடனடியாக வீட்டு மனைகளை கிரயம் செய்து தரக்கோரியும் கோரிக்கை மனு வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும்  பலர் உள்ளனர்.


- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: 9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad