இராணிப்பேட்டை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் இராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவண குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு நகரமன்ற தலைவி தேவி கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்று, காதொலி கருவி, சக்கர நாற்காலி வழங்கினார்.
ஆற்காடு, மேல்விஷாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்று பயனடைந்தனர். அப்போது மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் மற்றும் அசோசியேஷன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment