ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே ரெட்டிவலம் பகுதியில் சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தொழிற்சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் தவராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தொழிற்சங்க மாநில துணைச்செயலாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டார். கூட்டத்தில் டில்லி, கர்நாடக மாநிலத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்குவதுபோல் தமிழகத்திலும் ரூ. 3 ஆயிரம் வழங்கவேண்டும். ஓய்வூதிய பெறும் தொழிலாளி இயற்கை மரணம் அடைந்தால் ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்கவேண்டும். வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களையும் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்திலும், இஎஸ்ஐ திட்டத்திலும் இணைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
மேலும் வரும் 16-ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இராணிப்பேட்டையில் நடைபெறும் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிலாளர்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் கருணாநிதி, புரட்சி, ஜெயவேலு மற்றும் பனப்பாக்கம், நெமிலி பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment