பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா சாதிச் சான்று கேட்டு பேரணி, ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 3 July 2024

பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா சாதிச் சான்று கேட்டு பேரணி, ஆர்ப்பாட்டம்.

பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடுகள், சாதி சான்று கேட்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் கே. சேகர் தலைமையில் பேரணியாகச் சென்று செவ்வாயன்று (ஜூலை. 2) ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  


பேரணிக்கு காவல்துறையினரிடம் அனுமதி அளித்திருந்த நிலையில் பேரணிக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே சங்கத் தலைவர்களுடன் காவல்துறை யினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் அருகில் இருந்து பேரணியாக கிளம்பி ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் முடித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரணியில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 


இதில் விவசாய சங்க மாநில துணைச் செயலாளர் கே. நேரு, சிபிஎம்  மாவட்டச் செயலாளர் என். காசிநாதன், சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எம். குமார், வேலு, எஸ்.வெங்கடேசன், விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ். கிட்டு, செய லாளர் எல்.சி. மணி, வேட்டைக்காரன் பழங்குடி சங்கம் மாநில தலைவர் எம். சேட்டு, செயலாளர் டபிள்யூ. வரதராஜன், வி.தொ.ச மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, வட்டார, மாவட்டக் குழு உறுப்பினர்கள், பழங்குடி மக்கள் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். 


கோரிக்கைகள் பழங்குடி மக்கள் அனைவருக்கும் இனச் சான்று உடனே வழங்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வீட்டுமனை பட்டா உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடுகள் ரூ. 10 லட்சம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். காட்டுநாயக்கன் மக்களுக்கு இனச் சான்று வழங்க வேண்டும். வேட்டைக்காரன் இன மக்கள் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 


கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும்போது கோட்டாட்சி யர் அலுவலகத்தில் இருப்பதில்லை என தலைவர்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் உறுதியளித்தார்.


- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444..

No comments:

Post a Comment

Post Top Ad