அப்துல் அக்கீம் கல்லூரி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு, வாகன போக்குவரத்து நெரிச்சலால் விபத்து, கண்டுகொள்ளாத அதிகாரிகள், சமூக ஆர்வலர் ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 July 2024

அப்துல் அக்கீம் கல்லூரி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு, வாகன போக்குவரத்து நெரிச்சலால் விபத்து, கண்டுகொள்ளாத அதிகாரிகள், சமூக ஆர்வலர் ஆட்சியரிடம் மனு.


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த ஏஜி.ரவிக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது மேற்படி முகவரியில் வாழ்ந்து வருகிறேன்  என்னால் முடிந்த சமூக நலம் சார்ந்த பணிகளை செய்து வருகிறேன்.

விஷாரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட  சென்னை To வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அப்துல் அக்கீம் கல்லூரி இணைப்பு சாலை உள்ளது இந்த இடம்  தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமானது இந்த  இடத்தினை பெரும்வணிக நோக்கத்திற்காக மிகப்பெரிய முன்னணி வணிக நிறுவனங்களில்  ஒன்றான முட்டை மிட்டாய் கடை என்ற பெயரில் தேசிய நெடுஞ்சாலையை  ஆக்கிரமித்து கட்டிடம் மற்றும் செட் அமைத்து  மாதம் ஒன்றுக்கு பல லட்சங்கள் சம்பாதித்து வருகிறார்.


முட்டை மிட்டாய் கடையுள்ள பகுதி தேசிய நெடுஞ்சாலை மூன்று வழி இணைக்கும் பகுதியாகும் இந்த இடத்தில் கடை உள்ளதால்  இரண்டு,நான்கு சக்கர வாகனங்கள், கனராக வாகனங்களில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கானோர் சாலையிலே வாகனங்களை  நிறுத்திவிட்டு  டீ மற்றும் ஸ்னாக்ஸ் வாங்கி  செல்வதால்  சாலை குறுகி  அதிக அளவில் கூட்ட நெரிசல்,போக்குவரத்து தடை மற்றும் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.


தனிமனித உயிர்களை பாதுகாக்க வேண்டிய தேசிய நெடுஞ்சாலை மற்றும் , விசாரம் நகராட்சி அதிகாரிகள் சாலையில் கடை வைப்பதற்கு அனுமதி கொடுத்ததால்  விபத்து ஏற்பட்டு பல பேர் கை கால்கள் உடைந்து  மாற்றுத்திறனாளியாக மாறுவதற்கும், இறப்பதற்கும் காரணமாக இருக்கின்றனர், ஏழை மக்கள் சாலையை  ஆக்கிரமிப்பு செய்து  குடிசை வீடு கட்டியிருந்தால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டும், காணாமல் இருந்திருப்பார்களா?  உடனடியாக காவல்துறை உதவியை அணுகி ஆக்கிரமிப்பை போர்க்கால அடிப்படையில் அகற்றி இருப்பார்கள் ஏழைக்கு ஒரு சட்டம், பணக்காரனுக்கு ஒரு சட்டமா? ஆக்கிரமிப்பு செய்திருப்பவர் பணக்காரர் என்பதால்   அரசு அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்த்து, கண்டும் காணாமல் இருப்பது  சட்டத்திற்கு  விரோதமான செயல் எனவே அம்மா அவர்கள் மேற்படி (விஷாரம்) சென்னை To வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள முட்டை மிட்டாய் கடை  ஆக்கிரமிப்புகளை அகற்றி  இதற்கு உடந்தையாக இருந்து வரும் அரசு அதிகாரிகளின் மீது   துறை ரீதியாக  நடவடிக்கை எடுத்து   சாலை விபத்தின் மூலம் உயிரிழப்பு ஏற்படாத வகையில் பொதுமக்களை  பாதுகாக்குமாறு மிகவும் தாழ்மையோடு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad