இந்த மனுவின் மீது கடந்த 03.07.24 அன்று கடப்பந்தங்கள் கிராம நிர்வாக அலுவலர் மைதிலி ஆய்வு செய்துள்ளார், இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில் விஏஓ.மைதிலி மனுதாரர்களாகிய எங்களிடம் யார்? உங்களை மனு கொடுக்க சொன்னது. காலியாக உள்ள மனைகளின் சர்வே எண்கள் 150/2011, 138 என்று மணுவில் குறிப்பிட்டுள்ளீர்கள், இது காலிமனை என்று உங்களுக்கு எப்படி? தெரியும் இதனை ரத்து செய்து விட்டால் என்ன செய்வீர்கள்?
உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது நீங்கள் மனுவை கலெக்டரிம்தானே கொடுத்தீர்கள் அவரிடமே போய், பட்டா வாங்கிக்கொள்ளுங்கள். என்று வாய்க்கு வந்தப்படியெல்லாம் பேசுகிறார் என்றனர் மேலும் அவர்கள் பேசுகையில் மக்களுக்கு சேவை செய்யும் அதிகாரி இப்படி எங்களிடம் மரியாதைக் குறைவாக நடந்துக்கொள்வது. எங்களுக்கு மன உலைச்சலாயிருக்கிறது.
கலெக்டர் அம்மா எங்களின் உண்மை நிலையை அறிந்து எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment