இந்தியா முழுவதும் உள்ள 33 வயது நிரம்பிய எழுத படிக்க தெரியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை கல்வி அறிவு வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2022- ஆம் ஆண்டு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள், 100 நாள் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள இருளர் காலனி பகுதியில் எழுத படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணி நெமிலி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர். சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அப்போது அடிப்படை கல்வி அறிவின் முக்கியத்துவம் குறித்து எழுத படிக்க தெரியாதவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இதில் வேட்டாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். புவியரசு மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment