நெமிலி அருகே மேல்களத்தூர் கிராமத்தில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 14 July 2024

நெமிலி அருகே மேல்களத்தூர் கிராமத்தில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்களத்தூர் கிராமத்தில் முதலமைச்சரின் மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் வேளாண்மை உதவி இயக்குனர். அருணா குமாரி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான. சுந்தராம்பாள் பெருமாள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தக்க பூண்டு விதைகள் வழங்கி வேளாண்மையின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். 

இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள்,  வேளாண்மை உதவி அலுவலர். செந்தில்குமார், நெமிலி மத்திய ஒன்றிய கழக துணை செயலாளர் ஆ. சீனிவாசன், பி.டி. எம் நிர்மலா தேவி மற்றும் கிராம பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad