நெமிலி அருகே நாகவேடு கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு உணவு ஊட்டி விட்ட எஸ்.ஜி.சி பெருமாள் மற்றும் சுந்தராம்பாள் பெருமாள்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 15 July 2024

நெமிலி அருகே நாகவேடு கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு உணவு ஊட்டி விட்ட எஸ்.ஜி.சி பெருமாள் மற்றும் சுந்தராம்பாள் பெருமாள்!

ராணிப்பேட்டை மாவட்டம் மதிய உணவு திட்டம் கொண்டு வந்த பெருந்தலைவரின் பிறந்தநாளில் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெரும் பள்ளி குழந்தைகளும் பயன்பெறும் விதமாக இன்று திருவள்ளூரில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். 


அதன் தொடர்ச்சியாக கைத்திறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட  செயலாளருமான ஆர். காந்தி அவர்களின் ஆணைக்கினங்க, நெமிலி ஒன்றியம் நாகவேடு கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளியான சி.எஸ்.ஐ பள்ளியில் காலை உணவு திட்டம் தலைமை ஆசிரியர். நளினா நவக்குமாரி தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர். முருகேசன் வரவேற்பில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டது. 


இதில் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் நகர மன்ற தலைவர். லட்சுமி பாரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான. சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினர். இதில் நெமிலி மத்திய ஒன்றிய கழக செயலாளர். எஸ்.ஜி.சி பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன், வழக்கறிஞர்கள். பாபு, குமர குரு, நவின், வெங்கடேசன், பாளையத்தான், மணிகண்டன், ஜெகதீசன், விஜி, சுந்தரம், ரமேஷ் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம்  நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad