ராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உன்னத திட்டமான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் கூடுதலாக விரிவாக்கம் செய்யும் நிகழ்ச்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளுர் கிராமத்தில் உள்ள அரசு நிதி உதவிபெறும் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள். தாஸ்பிரகாஷ், ரவிச்சந்திரன், பள்ளுர் ஊராட்சி மன்றத்தலைவர். பிரதாப், ஒன்றியக்குழு உறுப்பினர். சரஸ்வதி பார்த்திபன் மற்றும் துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment