ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, நெமிலி ஊராட்சி ஒன்றியம் காட்டுப்பாக்கம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரா கலா, மாவட்ட வருவாய் அலுவலர். சுரேஷ், மாவட்ட நுகர்வோர், பழங்கள் துறை அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர். ஏகாம்பரம் தலைமையில் நெமிலி வட்டாட்சியர். ஜெயபிரகாஷ், நெமிலி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள். தாஸ் பிரகாஷ், ரவிச்சந்திரன், நெமிலி வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலர். அருணா குமாரி ஆகியோர் முன்னிலையில் மகேந்திரவாடி, உளியநல்லூர், கீழ்வீதி, துறையூர், வேப்பேரி கிராமங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து அரசின் அனைத்து துறைகளில் சார்ந்த கோரிக்கைளை மனுக்களாக 220 மனுக்களாக பெறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான. சுந்தராம்பாள் பெருமாள், மகேந்திரவாடி ஊராட்சி மன்ற தலைவர் பி. பரணிகுமார், கீழ்விதி ஊராட்சி மன்ற தலைவர். ஆனந்தி செல்வம், துறையூர் ஊராட்சி மன்ற தலைவர். குணசேகரன் அவர்கள் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் நெமிலி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவைத் தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய கழகத் துணை செயலாளர்கள். வெங்கடேசன், சீனிவாசன், நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment