ஆதிதிராவிடர் சுடுகாட்டு பாதை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 25 July 2024

ஆதிதிராவிடர் சுடுகாட்டு பாதை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டத்தில் உள்ள மேலப்பழந்தை தலித் மக்கள் வசிக்கும் புதிய குடியிருப்பு பகுதிக்கு சுடுகாட்டு பாதை அமைத்து தரக் கோரி விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் பி. ரகுபதி தலைமையில் புதனன்று (ஜூலை 24) கலவை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதையடுத்து, சங்கத் தலைவர்களுடன் கலவை வட்டாட்சியர் சுரேஷ் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, ஆதி திராவிட மக்கள் வசித்து வரும் குடி யிருப்பு பகுதியில் கால காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக்கோரி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர். அப்போது, ஒரு மாதத்தில் சுடுகாட்டு பாதை சீரமைத்து தரப்படும் என்று அதிகாரி உறுதியளித்தார். 


இந்த போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பி. செல்வன், மாவட்டச் செயலாளர் எபிஎம். சீனிவாசன், தலைவர் சந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் வி. மாரியப்பன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் என். காசி நாதன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு,பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், வேட்டைகாரன் பழங்குடி சங்க மாநிலத் தலைவர் எம். சேட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444 

No comments:

Post a Comment

Post Top Ad