நெமிலி அருகே சிறுணமல்லி கிராம மக்களின் பதினாறு ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு!. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 26 July 2024

நெமிலி அருகே சிறுணமல்லி கிராம மக்களின் பதினாறு ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு!.


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுணமல்லி ஊராட்சியில் பகுதிநேர ரேஷன் கடைக்கு தளவாடப் பொருட்களை ஒன்றிய பெருந்தலைவர் வழங்கினார். நெமிலி அடுத்த சிறுணமல்லி ஜெய்பீம் நகர் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் பதினாறு ஆண்டுகளாக  கோரிக்கை வைத்து வந்தனர். இதன் தொடர்பாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் மூலமாக மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்து உடனடியாக அந்தப் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர உத்தரவிட்டனர்.

அதன் பேரில் ரேஷன் கடைக்கு தளவாடப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர். ஜோதி அருணாச்சலம் தலைமை தாங்கினார், துணைத் தலைவர். கங்காபிராங்கிளின், ஒன்றிய கவுன்சிலர். சங்கரி செல்லப்பன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு பகுதி நேர கடையில் பொருட்கள் வாங்குவதற்கு தேவையான தளவாடப் பொருட்கள் எடை இயந்திரம் அத்தியாவசிய பொருட்களை வழங்கி பேசினார். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் நடைபெற்று வருகிறது. 


அதில் எடுத்துக்காட்டாக தங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து பகுதி நேர ரேஷன் கடையை அதிகாரிகள் திறப்பதற்கு ஆணையை வழங்கினர் என தெரிவித்தார். அப்போது உடன் ஊராட்சி செயலாளர். பெருமாள், ரேஷன் கடை விற்பனையாளர். பக்தவாச்சலம் மற்றும்  கிராம பொதுமக்கள் , இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad