சிறுமியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதி போக்சோ சட்டத்தில் கீழ் சிறையிலடைப்பு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 July 2024

சிறுமியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதி போக்சோ சட்டத்தில் கீழ் சிறையிலடைப்பு.


கடந்த 09.07.2016-ம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த லாடாவரம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் காங்கேயன் (வயது /36),மற்றும் இவரது மனைவி விஜயலட்சுமி (வயது /34) ஆகியோர் சிறுமியை பாலியல் குற்றம் செய்த வழக்கில் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும்  வழக்கு சம்மந்தமாக வேலூர் POCSO நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 12.07.2024-ம் தேதி வேலூர் மாவட்ட POCSO நீதிமன்ற நீதிபதி D.சிவக்குமார் அவர்களால் மேற்கண்ட வழக்கில் தொடர்புடைய ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுக்கா, லாடாவரம், மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த  மனோகரன் என்பவரின் மகன்  காங்கேயன் (வ/36)  என்பவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 5,000 அபராதம் மற்றும் இவரது மனைவியான விஜயலட்சுமி (வ/34) என்பவருக்கு 18 மாதங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 2,500 அபராதம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.


மேலும் இவ்வழக்கை சிறப்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி தண்டனை பெற்று தந்த சிறப்பு அரசு வழக்கறிஞர் சந்தியா மற்றும் வழக்கின் புலனாய்வு அதிகாரிகள் அப்போதைய ஆற்காடு தாலுகா வட்ட காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, அப்போதைய ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி மற்றும் தற்போதைய ஆற்காடு கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் சாலமன் ராஜா மற்றும் நீதிமன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர்களை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி அவர்கள் வெகுவாக பாராட்டினார் 


- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad