ஆற்காடு நகர மன்ற தலைவர். தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 18 August 2024

ஆற்காடு நகர மன்ற தலைவர். தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நாட்டாமை ராஜி தெரு ஆறாவது வார்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பாலாற்றில் இருந்து தாய் கரகம் ஜோடித்து ஆற்காட்டின் முக்கிய வீதிகள் வழியாக ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 


இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு நகர மன்ற தலைவர். தேவி பென்ஸ் பாண்டியன் அவர்கள் திருவிழாவிற்கு தலைமை தாங்கினார். காந்தி முதியோர் இல்ல துணைத் தலைவரும், சமூக ஆர்வலருமான. பென்ஸ் பாண்டியன் அவர்கள் கரகம் ஏந்தி நடனம் ஆடி அம்மனுக்கு வழிபாடு செய்தார். உடன் நாட்டாமை. பாண்டுரங்கன், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad