பனப்பாக்கம் அருகே நங்கமங்கலம் கிராமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ குழந்தை பட்டு அம்மன் கோவில் திருவிழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 18 August 2024

பனப்பாக்கம் அருகே நங்கமங்கலம் கிராமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ குழந்தை பட்டு அம்மன் கோவில் திருவிழா!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் அடுத்த நங்கமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குழந்தை பட்டு அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு பால் குடம் எடுத்தல், காலை 11 மணிக்கு கிராம தேவதை குழந்தை பட்டு அம்மன் வர்ணித்தல், பகல் 12 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீபாராதனையும், இரவு 8:30 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நங்கமங்கலம் ஊர் பொதுமக்கள் சார்பில் கிராம தேவதை ஸ்ரீ குழந்தை பட்டு அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad