நெமிலியில் எழுச்சித்தமிழர் அகவை நாள் விழா இனிப்பு வழங்கி விசிக- வினர் கொண்டாட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 17 August 2024

நெமிலியில் எழுச்சித்தமிழர் அகவை நாள் விழா இனிப்பு வழங்கி விசிக- வினர் கொண்டாட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெமிலி   பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாபாசாகிப் டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார்   சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி எழுச்சித்தமிழர்   தொல் திருமாவளவன் எம்.பி அவர்களின் 62 அகவை தின நாள் வெகு விமர்சையாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சமூக நல்லிணக்க பேரவை (ம) மாவட்ட அமைப்பாளர் எம் குமார் தலைமையில் பிறந்தநாள் விழா வாத்தியங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். 


இந்த நிகழ்வின்போது இரா. திருநாவுக்கரசு நெமிலி நகர துணை செயலாளர், ராஜீவ்காந்தி நகர பொருளாளர்,கோட்டி இளஞ்சிறுத்தைகள் எழுச்சி நகர துணை அமைப்பாளர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் கட்சித் தொண்டர்கள் என திரளான நாள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சி முடிவில் நெமிலி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி எஸ். ஸ்ரீதர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad