இராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் கலவை வட்ட ஆய்வாளர் .கவிதா மற்றும் போலீசார் தலைமையில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய 3 பேரை 17.08.2024 தேதி கைது செய்து அவர்களிடமிருந்து 28 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 1/4 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த 20.09.2024 மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி 28 சவரன் தங்க நகை மற்றும் 1 1/4 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., இதில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் மற்றும் ஆளிநர்களை அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
செய்தியாளர்.மு.பிரகாசம்.நெமிலிதாலுகா
No comments:
Post a Comment