இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப.. அவர்கள் நேற்று (25.09.2024) நெமிலி வட்டம். மேலப்புலம்புதூர் கிராமத்தில் KKR மாணிக்கம்மாள் திருமண மண்டபத்தில் சிறப்பு மனுநீதி நாள் நடைபெற்றது. இந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு .சந்திரகலா இஆப 446 பயனாளிகளுக்கு ரூ.3.39 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்வின் போது வருவாய் அலுவலர் ந. சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, பேரூராட்சித் தலைவர்கள் ரேணுகா தேவி சரவணன், கவிதா சீனிவாசன், வட்டாட்சியர்கள் ஜெய்பிரகாஷ், ஆனந்தன், ஊராட்சி மன்றத் தலைவர் அனிதா மற்றும் பலர் உள்ளனர்.
- செய்தியாளர் மு பிரகாசம் நெமிலி தாலுக்கா
No comments:
Post a Comment