ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர் (இருளர்) சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது நாங்கள் மேற்கண்ட ஊராட்சியில் ஏறக்குறைய 15 குடும்பத்தினர் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோவில் மனையில் அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீட்டில் 20 வருடங்களாக வாழ்ந்து வருகிறோம் தற்போது குடியிருந்து வரும் வீடு மிகவும் பழுதடைந்து மோசமாக நிலையில் உள்ளது இதே வீட்டில் தான் குழந்தைகளுடன் வசித்து வருகிறோம்.
மேலும் இது குறித்து புதிய வீடு கட்டி தருவதற்கு சாயனாபுரம் ஊராட்சி நிர்வாகத்திடம் நேரில் சென்று கேட்டபோது நீங்கள் வசித்து வரும் இடம் கோவில் மானியம் எனபதால் அதில் வீடு கட்டித் தர இயலாது எனவும், மேலும் அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா இருந்தால் உடனடியாக வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர், எனவே சயனபுரம் ஊராட்சிலேயே மாற்று இடம் ஒதுக்கி இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கட்டி தர உதவரமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment