நெமிலி அருகே கீழாந்துரை கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பெ. வடிவேலு தொடங்கி வைப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 6 October 2024

நெமிலி அருகே கீழாந்துரை கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பெ. வடிவேலு தொடங்கி வைப்பு!

.com/img/a/

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழாந்துரை கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு முகாமினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, திட்டப் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 


மேலும் இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு, சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவது குறித்தும், பொதுமக்கள் இந்த முகாமில் எவ்வாறு பயன்பெற முடியும் என்பது குறித்தும் விளக்கிப் பேசினார். இந்த மருத்துவ முகாமில் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு திட்ட விளக்கவுரை ஆற்றினர். இந்த சிறப்பு மருத்துவ முகாமில், பொது மருத்துவம், இருதய சிகிச்சை பிரிவு, மகப்பேரு மருத்துவம், கர்பப்பை, வாய் புற்றுநோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், எலும்பு முறிவு, மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல் மற்றும் கண் மருத்துவம், கோவிட்-19, சித்த மருத்துவம், தொழுநோய், காசநோய், குழந்தைகள் நலம் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. 

இம்முகாமில், ஊராட்சி மன்றத் தலைவர். மின்னல்ஒளி அம்பேத்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர். சங்கரி செல்லப்பன், ஊராட்சி மன்றத் துணை தலைவர். பாபு, கலைஞர்தாசன், சுகாதார ஆய்வாளர்கள். பெருமாள், பூஞ்செழியன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், சுகாதர செவிலியர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad