ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்களத்தூர் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்படும் கிராமத்தின் பெயர் பதித்த பெயர் பலகை மற்றும் பேருந்து நிலையம் இல்லாமல் கீழ்களத்தூர் கிராமம் உள்ளது. நெமிலியில் இருந்து அன்வர்த்திகான் பேட்டை செல்லும் வழித்தடத்தில் சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
நெமிலி மற்றும் அரக்கோணத்தில் இருந்து பேருந்தில் பயணம் செய்வோர் டிரைவர் மற்றும் கண்டக்டர் இடம் வழி கேட்டு (இடம்) இறங்கி செல்கின்றனர். வாகன ஓட்டிகள் இடம் தெரியாமல் அருகில் உள்ள மேல்களத்தூர் கிராமத்திற்கு செல்கின்றனர்.
கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக கீழ்களத்தூர் கிராமத்திற்கு பெயர் பலகை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைத்து தர வேண்டி கீழ்களத்தூர் கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment