பள்ளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு எஸ்.எஸ்.எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. ஏ.கே. நடராஜன் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், கல்வியுடன் இணைந்து கலைகளும் மாணவர்களின் ஆளுமைத் திறன் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் செயலர் அன். சங்கர் கலந்து கொண்டார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உளவியல் வாழ்க்கைத்திறன் பயிற்சியாளரும், ‘ஒன் லைப் அகாடமி’யின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் கே. கார்த்திக் வேலு பங்கேற்று உரையாற்றினார். அவர் மாணவர்களிடையே தன்னம்பிக்கை வளர்ப்பு மற்றும் நவீன உலகில் வாழ்க்கைத்திறன்களின் அவசியம் குறித்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகளின் நடனம், நாடகம், இசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. விழாவின் இறுதியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
.jpg)
No comments:
Post a Comment