கலவை, பிப். 06:
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள பாலி கிராமத்தில், தமிழக வெற்றி கழகம் (தவெக) திமிரி கிழக்கு ஒன்றியத்தின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கிளைக் கழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமிரி ஒன்றிய கழக செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் பாலி சீனுவாசன், சரவணன், விகேஷ்வரன், கோவிந்தராஜ், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், “தற்போதைய திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா பயன்பாடு போன்ற சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன. இந்த ஆட்சியை அகற்றினால்தான் தமிழ்நாடு பாதுகாப்பான, அமைதியான மாநிலமாக மாறும். தலைவர் யாரை வேட்பாளராக கைகாட்டி நிறுத்தினாலும், அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ‘பிகில்’ சின்னத்தை குழந்தைகளுக்கு வழங்கி, அனைவரும் பிகில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்ட இணை செயலாளர் காந்திபிரசாத் உள்ளிட்டோர், மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.jpg)
No comments:
Post a Comment