வாலாஜாபேட்டை – பிப்ரவரி 06:
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஜங்கம்மர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுயம்பு துர்க்கை அம்மன் திருக்கோயில் திருக்குட மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், கோபூஜை, நவகிரக ஹோமம், லக்ஷ்மி ஹோமம், 108 மூலிகை ஹோமம், சுவாமிகளுக்கு காப்பு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசை வாத்தியங்களுடன் விமானத்திற்கும், மூலவர் சிலைக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனையுடன் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு வரவேற்பாளர்களாக கண்ணன் வடுகாம்பாள் ஜமீன்தார், கந்தன் எழிலரசி ஆகியோரை விழா குழுவினர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம். சுகுமார், மாவட்ட துணைத் தலைவர் வேதகிரி, வாலாஜா நகர கழக செயலாளர் டபிள்யூ.ஜி. மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும் கோயில் நிர்வாகிகள் விஜயராகவன், விஜயசங்கர்ராவ், முனியன், சம்பத், ரவி, ஊர் நாட்டாமைதாரர்கள், பக்தகோடிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
.jpg)
No comments:
Post a Comment