இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த திருமால்பூர் கிராமத்தில் புகழ்பெற்ற மணிகண்டீஸ்வரர் ஆலயம்அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் திருச்சி சேக்கிழார் மன்றம் மற்றும் சைவ நெறி கழகத்தை சேர்ந்த தத்புருஷ தேசிக சரவணபவ குழுவினர் இணைந்து கோயில் வளாகத்தில் நேற்று திருவாசகம், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளுர், பனப்பாக்கம், நெமிலி, ராணிப்பேட்டை, அரக்கோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்துகொண்டு திருமுறை பாடல்களை பாடினர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment