இராணிப்பேட்டை மாவட்டம் ,நெமிலி தாலுகாபனப்பாக்கம் மயூரநாத ஆலயத்தில் சித்திரை மாத பிரம்ம உற்சவ தேர் திருவிழா - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 30 April 2023

இராணிப்பேட்டை மாவட்டம் ,நெமிலி தாலுகாபனப்பாக்கம் மயூரநாத ஆலயத்தில் சித்திரை மாத பிரம்ம உற்சவ தேர் திருவிழா


இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மயூரநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 36 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை மாத பிரம்ம உற்சவ தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான சித்திரை மாத பிரம்ம உற்சவ விழாவின் முதல் நாளான கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இரண்டாம் நாளில் பூத வாகனத்திலும்,மூன்றாம் நாளில் சூரிய பிரபையிலும்,நான்காவது நாளில் நாக வாகனத்திலும், ஐந்தாம் நாளில் நந்தி வாகனத்திலும், ஆறாம் நாளில் யானை வாகனத்திலும் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஏழாம் நாளான பிரம்ம உற்சவ தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.தொடர்ந்து சன்னதி  வீதிகளில் புஷ்ப அலங்காரத்துடன் தேரில் மயூரநாத சுவாமியும், சவுந்தரநாயகி அம்மையாரும் ஊர்வலமாக வந்தனர். இவ்விழாவில் ஒச்சேரி, நெமிலி, பள்ளுர், ரெட்டிவலம், ஜாகீர் தண்டலம், மேலபுலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad