ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் கிராம சபை கூட்டம் திருமால்பூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர். துலுக்காணம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர். எஸ் .ஜி.சி.பெருமாள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுந்தரம்மாள் பெருமாள் அவர்கள் கலந்துகொண்டு மக்கள் குறைகளை கேட்டு அறிந்தார்.

அதில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் திட்டம், இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம், நீர்நிலைப் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் அமைத்து தருதல், மகுலியாங்கால்வாய் சீரமைத்தல் ஆகிய திட்டங்களை பற்றி கிராம பொதுமக்களிடத்தில் கலந்துரையாடப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் சரவணன், வார்டு உறுப்பினர்கள், பணிதல பொறுப்பாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ஊராட்சி மன்ற துணை தலைவர். பாஸ்கரன் அவர்கள் நன்றி கூறினார்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment