ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் ஆட்டுப்பாக்கம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மே தினத்தில் முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர். நித்தியா ராமதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு புதிய ஊராட்சிகளின் சட்டத்தின் படியும் தமிழக அரசின் ஆணைப்படி ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, சாலை வசதி, குடியிருப்பு வசதி போன்ற தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.

இதில் ஒன்றிய கவுன்சிலர்.வினாயகம்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மு.சத்யமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் தேவி மணிகண்டன், கல்பனா தணிகாசலம், சூர்யா,கோமதி செல்வம், முரளி, பெருமாள், மக்கள் நலப் பணியாளர். ம. அமரேசன்,ஊராட்சி செயலாளர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment