மே தினத்தை முன்னிட்டு நெமிலி ஊராட்சி ஒன்றியம் உளியநல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா, பனப்பாக்கம் உள்வட்டம், உளியநல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் வளாகத்தில் தமிழக அரசின் ஆணைப்படி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சதாசிவம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர். அ. குல்நார், எஸ் .எம்.சி.தலைவர் ஜாக்குலின், கிராம நிர்வாக அலுவலர். கே. லஷ்மணன், சத்துணவு அமைப்பாளர், ஆசிரியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க எஸ். எம். சி.தலைவர் அவர்கள் நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment