இராணிப்பேட்டை மாவட்டம் ,நெமிலி தாலுகாஉத்திரம்பட்டு சோலையம்மன் ஆலய சித்திரை திருவிழா - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 30 April 2023

இராணிப்பேட்டை மாவட்டம் ,நெமிலி தாலுகாஉத்திரம்பட்டு சோலையம்மன் ஆலய சித்திரை திருவிழா


இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம்பட்டு கிராமத்தில் சோலையம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு நெய், பால், தயிர், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் அம்மனுக்கு பொங்கலிட்டு படையல் இடப்பட்டது.


இதை தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு ஆகாய மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு இரவு சோலையம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஒச்சேரி, ஆயர்பாடி, தர்மநீதி, தட்சம்பட்டறை, ஈரளம்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad