நெமிலி அருகே 10 ஆண்டுகளாய் தென்மாம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய் தூர்வாரப்படாததால் நெடும்புலி வி ஏ ஓ அலுவலகம் எதிரில் மழை நீர் குளம் போல் தேங்கி காட்சி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 8 May 2023

நெமிலி அருகே 10 ஆண்டுகளாய் தென்மாம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய் தூர்வாரப்படாததால் நெடும்புலி வி ஏ ஓ அலுவலகம் எதிரில் மழை நீர் குளம் போல் தேங்கி காட்சி!


நெமிலி அருகே 10 ஆண்டுகளாய் தென்மாம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய் தூர்வாரப்படாததால் நெடும்புலி வி ஏ ஓ அலுவலகம் எதிரில் மழை நீர் குளம் போல் தேங்கி காட்சி!


ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் உள் வட்டம், பனப்பாக்கத்தில் இருந்து (நெடும்புலி) தென்மாம்பாக்கம் பகுதியில் உள்ள ஏரிக்கு செல்லும் கால்வாய் பத்து ஆண்டுகளாய் தூர்வாரப்படாததால் கால்வாய் முற்றிலும் தூர்ந்துபோய் முள், செடி, கொடி, பூண்டு என வளர்ந்து கால்வாயில் மண்டி கிடைக்கின்றன. இதனால் நெடும்புலி கிராம நிர்வாக அலுவலகம் எதிரே உள்ள அரக்கோணம் ரோட்டில் நேற்று பெய்த கன மழையால் மழைநீர் தேங்கி  குளம்போல் காட்சியளிக்கிறது. 

அலுவலகம் பின்புறம் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து உள்ளன. அரக்கோணம் ரோட்டில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமப்பட்டு அதை கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதை சரி செய்யுமா?
 

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad