ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவிற்கு உட்பட்ட கரிவேடு கிராமத்தில் பஜனை கோவில் மேலாண்டை தெருவில் 35-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 30 வருடங்களாக சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நில அபகரிப்பு மற்றும் பயன்பாட்டு நிலங்களை அவதூறு செய்தல் போன்ற சம்பவங்கள் இப்பகுதியில் நடைபெற்று வருகின்றன.

மழைக்காலங்கள் மற்றும் இறுதி சடங்கு காலங்களில் இறந்தவர்களின் உடலை கூட எடுத்துச் செல்ல முடியாத அவல நிலையில் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.ஊராட்சி மன்ற தலைவரிடம் இது குறித்து மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்களின் வேதனையாக உள்ளது. அரசு விரைந்து எங்களுக்கு ஏற்ற சாலை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment