ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த மகேந்திரவாடி கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, ராணிப்பேட்டை மாவட்ட திமுக கழக செயலாளர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்கள் வழிகாட்டுதலின்படி நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
- மகளிர் மேம்பாடு: செப்டம்பர் முதல் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 , 8,57,949 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 47,034, கோடியில் வங்கி கடன் தள்ளுபடி,
- காலை உணவுத்திட்டம் : ரூ. 500 கோடியில் 18 இலட்சம் தொடக்கப்பள்ளி மாணாக்கர்களுக்கு பயன்,
- வேலைவாய்ப்பு: 1,241 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,44,961 பணியாளர்கள் நியமனங்கள், 4,09,651 நபர்களுக்கு வேலைவாய்ப்பு, 4. போக்குவரத்து: ரூ. 1000 கோடியில் 2000 புதிய பேருந்துகள் கொள்முதல். 1500 பழைய பேருந்துகள் புதுப்பிப்பு,
- தொழில் வளர்ச்சி: 222 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரூ. 2,72,322 கோடி முதலீடுகள் போன்ற தமிழக அரசு சாதனைகளை பற்றி விளக்கி பேசினர்.

நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு, நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர். பி. ரவீந்திரன் ஆகிய மூவரும் இணைந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் தமிழக அரசின் சாதனை விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கினர் மற்றும் மகளிருக்கு புடவைகள் பரிசாக வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள், ஒன்றிய துணை செயலாளர்கள். எ. சீனிவாசன், சரளா முரளி, வெங்கடேசன், பொருளாளர். பி. செல்வம், ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி வெங்கடேசன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர். மார்க்கண்டேயன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். வி. எஸ். முரளி, அவைத்தலைவர். பொன்னுரங்கம், மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், நெமிலி மேற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். அரிசங்கர், துணை அமைப்பாளர் ஜே. ராஜராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment