ராணிப்பேட்டை மாவட்டம், மாண்புமிகு தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் அவர்களின் காலைச் சிற்றுண்டி திட்டத்தின் மைய பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஒன்றிய குழு துணைப் பெருந்தலைவர் ச.தீனதயாளன், உதவி திட்ட அலுவலர் (கணக்கு மற்றும் நிர்வாகம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு), வட்டார இயக்க மேலாளர், மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment