நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 8 May 2023

நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!.


நெமிலி அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ராணிப்பேட்டை மாவட்ட திமுக கழக செயலாளர் மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 

இதில் மாவட்ட  அவைத்தலைவர் ஏ. கே. மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் மு. சிவானந்தம், கே. துறை மஸ்தான், குமுதா குமார், ஒன்றிய அவைத்தலைவர் எ. புருஷோத்தமன், ஒன்றிய துணை செயலாளர்கள் ஆர். பாண்டியன், பாரதி ஜெயசந்தர், ஒன்றிய பொருளாளர். சங்கர், மாவட்ட பிரதிநிதி. வினாயகம், ஆர். அரிகிருஷ்ணன், பெருமாள், தலைமை பொதுக்குழு உறுப்பினர். அ. அப்துல் நசீர், முதன்மை பொதுக்குழு உறுப்பினர். பவானி வடிவேலு, மங்களாபுரம் கிளை கழக செயலாளர். ஏ. வினாயகமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள். ஆர். பிரதாப் பள்ளூர், சித்தூர் வெங்கட் ரமணா, கீழாந்துரை மின்னல் ஒலி அம்பேத்ராஜ், இழுப்பை தண்டலம் அனுஷியா மகாலிங்கம், மாங்காட்டுச்சேரி ரேகா பார்த்திபன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad