நெமிலி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 8 May 2023

நெமிலி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!


நெமிலி அருகே ரெட்டிவலம் கிராமத்தில் நெமிலி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த ரெட்டிவலம் கிராமத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ராணிப்பேட்டை மாவட்ட திமுக கழக செயலாளரும், கைத்தறி மற்றும் துணை நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி நெமிலி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கு பொதுக்கூட்டம் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். ஆர். பி. ரவீந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 

இதில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு, நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுந்தரம்மாள் பெருமாள், அகவலம் கவுன்சிலர் கிருஷ்ணவேணி வெங்கடேசன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர். அண்ணாமலை, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad